Home Archive by category

10 நிமிடத்தில் செய்யலாம் வாழைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்: 

வாழைக்காய் - 1 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
வெங்காயம் - 1 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
அரைக்க தேங்காய் துருவல் - கால் கப் ப.
மிளகாய் - 3 
சீரகம் - 1 டீஸ்பூன் 
தாளிக்க கடுகு - 1 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 2
 கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை: 

முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து மஞ்சள் தூள் சேர்த்த பின்னர் நறுக்கிய வாழைக்காயை சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும். வாழைக்காய் வேக அதிக நேரம் ஆகாது. 
 
வாழைக்காய் வெந்தவுடன் அரைத்த தேங்காயை போட்டு 2 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வைத்த இறக்கி பரிமாறவும். 

இப்போது சூப்பரான வாழைக்காய் வறுவல் ரெடி.

 

Related Posts