Home Archive by category

இந்திய வம்சாவளி நபரிடம் அடிபணிந்த எலான் மஸ்க்

உலகின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரரும், டெஸ்லா (Tesla), ட்விட்டர் (Twitter), ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க சீக்கிய இளைஞர் முன் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அமெரிக்க சீக்கிய விமர்சகரும், சுயேச்சை ஆய்வாளருமான ரந்தீப் ஹோதி, மஸ்க் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மஸ்க் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக அவர் குற்றம் சாட்டினார். டெஸ்லா ஊழியர்யர் ஒருவரை துன்புறுத்தியதாகவும், அவரை கொலை செய்ய முயற்சி மேற்கொண்டதாகவும்,  மஸ்க், ரந்தீப் ஹோதி மீது குற்றம் சாட்டினார். இந்நிலையில், இதனை எதிர்த்து ஹோதி 2020 ஆம் ஆண்டில் மஸ்க் மீது வழக்குப் பதிவு செய்தார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இந்த ஆண்டு மார்ச் மாதம், மஸ்க், ஹோதியிடம் வழக்கை வாபஸ் பெரும்படி கேட்டுக் கொண்டார். வழக்கைத் தீர்ப்பதற்கு $10,000 கொடுக்கவும் மஸ்க் ஒப்புக்கொண்டார்.

மஸ்க்கின் செட்டில்மென்ட் வாய்ப்பை தான் ஏற்றுக்கொண்டதாக ஹோதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர், 'இந்த வழக்கு ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்காக இருந்தது. இது பணம் அல்லது புகழ் பெறுவது அல்ல. இது நான் சொன்னது சரி என்பதை நிரூபித்துள்ளது. ஹோதி @skabooshka என்ற பெயரில் ட்விட்டர் கணக்கை வைத்துள்ளார். அங்கு அவர் எலோன் மஸ்க் மற்றும் அவரது நிறுவனத்தின் கூற்றுக்களை உண்மை தன்மையை பரிசோதித்து பதிவிட்டு வந்தார். இதில், ஆட்டோமேஷன், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி குறித்த நிறுவனத்தின் கூற்றுகள் அம்பலமானது. ஏப்ரல் 2019 இல், டெஸ்லா தொழிற்சாலை வாகன நிறுத்துமிடத்தில் ஹோதி ஒரு ஊழியர் மீது காரை ஏற்றியதாக டெஸ்லா குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை ஹோதி மறுத்தார்.

யார் அந்த ரந்தீப் ஹோதி

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆசிய மொழிகள் மற்றும் கலாச்சாரங்களில் முனைவர் பட்டம் பெறும் ரந்தீப் ஹோதி, டெஸ்லா நிறுவனத்தை விமர்சிப்பவர். டெஸ்லா உலகின் மிகப்பெரிய மின்சார கார் தயாரிப்பாளராகவும், சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகவும் உள்ளது. ஹோதி 2009 இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். டெஸ்லா கார் ஆலையை வைத்திருக்கும் ஃப்ரீமாண்டில் அவரது பெற்றோர் வசிக்கின்றனர். எலோன் மஸ்க் மற்றும் டெஸ்லாவை விமர்சிக்கும் உலகளாவிய குழுவின் உறுப்பினராக ஹோதி உள்ளார். குழுவில் முன்னாள் டெஸ்லா ஊழியர்கள், ஹோதி போன்ற மாணவர்கள் மற்றும் பிற நிபுணர்கள் உள்ளனர். இந்தக் குழுவின் ஹேஷ்டேக் $TSLAQ ஆகும்.

Related Posts