Home Archive by category

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: முதல் நாளே இங்கிலாந்து தடுமாற்றம்

தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், ஒல்லி போப் 61 ஓட்டங்களுடனும் ஸ்டுவர்ட் புரோட்ட ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் களத்தில் இருந்தனர்.

நேற்று (புதன்கிழமை) லண்டன்-லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணியில், அலெக்ஸ் லீஸ் 5 ஓட்டங்களுடனும் ஸெக் க்ரெவ்லி 9 ஓட்டங்களுடனும் ஜோ ரூட் 8 ஓட்டங்களுடனும் ஜோனி பேயர்ஸ்டொவ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் 20 ஓட்டங்களுடனும் பென் போக்ஸ் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், நோக்கியா 3 விக்கெட்டுகளையும் கார்கிஸோ ரபாடா 2 விக்கெடடுகளையும் மார்கோ ஜென்ஸன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 4 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி இன்று தொடரவுள்ளது.

Related Posts