தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய அதிகாரிக்கு கிடைத்த பதவி
36 வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட, இந்திய விமானப்படை அதிகாரி, இந்திய தெற்கு விமானப்படையின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஏயார் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன் என்பவரே, இந்திய தெற்கு விமானப்படையின் தலைமைத் தளபதியாக நேற்று முன்தினம் பதவியேற்றார்.
1986 இல் அவர் இந்திய விமானப்படையில் பணியமர்த்தப்பட்டார். அவர் பல்வேறு வகையான உலங்கு வானூர்திகள் மற்றும் நிலையான இறக்கை விமானங்களில் 5,400 மணிநேரங்களுக்கு மேல் பறந்துள்ளார்.
அத்துடன் அவர் ஒரு போர் தலைவரும் பயிற்றுவிப்பாளரும் ஆவார். ஏயார் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன். அதி விசேட சேவை பதக்கம் மற்றும் வாயு சேனை பதக்கம் ஆகிய அரச தலைவர் விருதுகளை வென்றுள்ளார்.