யாழிலுள்ள தேவாலயத்தில் 30 லட்சம் பெறுமதியான தங்காபரணங்கள் கொள்ளை

யாழ்ப்பாணம் – கட்டைகாடு பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றின் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தங்காபரணங்கள் நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த தேவாலயத்தின் உற்சவம் கடந்த 14 மற்றும் 15ம் திகதிகளில் இடம்பெற்றது.
இந்த உற்சவத்தில் கலந்துக்கொண்டிருந்த குழுவொன்று, இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவாலயத்தின் நிர்வாக அருட்தந்தையினால், மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட தங்காபரணங்களின் பெறுமதி சுமார் 30 லட்சம் ரூபா என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.