முல்லைத்தீவில் புத்தருக்கு ஏற்பட்ட நிலை

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம்பகுதியில் புதிதாக வந்தமர்ந்த புத்தரை சேதப்படுத்தினார் எனத் தெரிவித்து ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் காவல்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது 1.5அடி உயரம் கொண்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு உடப்பு பகுதியினை சேர்ந்த 33 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் மீன்பிடி தொழிலுக்காக கொக்குளாய் முகத்துவாரம் பகுதிக்கு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது மேலதிக விசாரணையினை கொக்குளாய் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.