Home Archive by category

10 பிள்ளைகள் வரையில் பெற்றெடுங்கள்; புடின் விடுத்துள்ள கட்டளை

ரஷ்ய தாய்மார்களை அதிக பிள்ளைகள் பெற்றெடுக்க ஊக்குவிக்கும் பொருட்டு சோவியத் காலகட்ட ஊக்கத்தொகை அறிவிப்பு திட்டத்தை விளாமிடிர் புடின் அறிமுகம் செய்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் கடும் இழப்புகளை எதிர்கொண்ட ரஷ்யா, அப்போதைய தலைவர் ஜோசப் ஸ்டாலினால் 1944ல் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தது. அதில் தாயாரே உச்ச நட்சத்திரம் என்ற பட்டமும் உருவாக்கப்பட்டது.

அப்போது தொடங்கி சுமார் 400,000 குடிமக்கள் பத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் பெற்று குறித்த வெகுமதியை பெற்றுக்கொண்டனர். ஆனால் 1991ல் சோவியத் ஒன்றியம் சின்னாபின்னமான நிலையில், குறித்த திட்டமும் கைவிடப்பட்டது.

அந்த திட்டத்தை தற்போது விளாடிமிர் புடின் தூசு தட்டி வெளியே கொண்டு வந்துள்ளார். நாட்டில் சரிவடைந்து வரும் மக்கள் தொகை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர குறித்த திட்டம் உதவும் என முன்னர் புடின் கூறியிருந்தார்.

இந்த நிலையில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்ய தாய்மார்களுக்கு 13,000 பவுண்டுகள் வெகுமதியாக அளிக்கப்படும் என புடின் அறிவித்துள்ளார்.

10 பிள்ளைகள் வரையில் பெற்றெடுங்கள்... ரஷ்ய தாய்மார்களுக்கு புடின் கட்டளை | Russian Mum Who Gives Birth10 Children

மேலும், பத்தாவது குழந்தையின் முதல் பிறந்தநாளின் போதே வெகுமதி தொகை அளிக்கப்படும். மட்டுமின்றி, எஞ்சிய 9 குழந்தைகளும் உயிருடன் இருந்தால் மட்டுமே தொகை கையளிக்கப்படும்.

ஆனால் தீவிரவாதம் அல்லது உள்நாட்டு கலவரங்களால் எவரேனும் அந்த சகோதரர்களில் கொல்லப்பட்டிருந்தால் விதி விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெகுமதி தொகையுடன், ரஷ்ய கொடி பொறிக்கப்பட்ட தங்கத்தாலான பதக்கமும் அளிக்கப்படும். ரஷ்யாவில் கடந்த 10 ஆண்டுகளாக ரஷ்ய மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் சரிவடைந்தே காணப்படுகிறது.

மக்கள் தொகை சரிவு விகிதம் 2021 முதல் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது மற்றும் கொரோனா தொற்றுநோய் தாக்கத்தின் காரணமாக முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts