செல்லப் பிராணிகளிடமிருந்து ஒதுங்கி இருங்கள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனிதர்களிடம் இருந்து முதல் முறையாக நாய்க்கு குரங்கு அம்மை பரவியது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.
பாரிஸில் வாழும் ஒரு நபரிடம் இருந்து அவரது செல்லப்பிராணி நாய்க்கு குரங்கு அம்மை பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு கூறுகையில்,
இது மனிதர்களிடமிருந்து விலங்குக்கு பரவும் முதல் வழக்கு. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளிடமிருந்து தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.