Home Archive by category

அமெரிக்காவின் முக்கிய சோதனை வெற்றி!

கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர அணுஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் மினிட்மேன்-3 ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மற்றும் நான்சி பெலோசியின்(Nancy Pelosi) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை சுற்றி ஏவுகணை சோதனை மற்றும் ராணுவப் பயிற்சிகளை சீனா மேற்கொண்ட நிலையில், பதற்றத்தைத் தூண்டுவதைத் தவிர்ப்பதற்காக ஏவுகணை சோதனை அமெரிக்கா இருமுறை ரத்து செய்ததது.

இந்நிலையில், கலிஃபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்தில் இருந்து பசுபிக் கடற்பகுதியில் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, பொறுப்புள்ள அணுசக்தியின் நடத்தையை அமெரிக்கா வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

Related Posts