Home Archive by category

பிரித்தானியாவில் துணைப் பிரதமர் நியமனம்

நாட்டின் புதிய துணைப் பிரதமராக ஆலிவர் டவுடனை பிரித்தானிய அரசாங்கம் நியமித்துள்ளது.

முன்னாள் துணைப் பிரதமரும் நீதித்துறை செயலாளருமான டொமினிக் ராப் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய துணைப் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதார்.

இந்நிலையில் டொமினிக் ராப் தனது ஊழியர்களை துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான அறிக்கை வெளியானதை அடுத்து அவர் ராஜினாமா செய்தார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, பிரிட்டனின் புதிய துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலிவர் டவுடன், பிரதமர் ரிஷி சுனக்கின் கேபினட் அலுவலக அமைச்சராகப் பணியாற்றினார்.

பிரிட்டனின் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Related Posts