மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிட தயாராகும் பைடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவேண்டுமா என்ற விடயத்தில் ஜனநாயக கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும் அவர் போட்டியிட்டால் தாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம் என ஜனநாயக கட்சியின் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
அசோசியேட் பிரஸ் பொதுவிவகார ஆய்விற்கான நோர்க் நிலையம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 26 வீதமான அமெரிக்கர்கள் ஜோபைடன் மீண்டும் தேர்தலில் போட்டியிடவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
ஜனவரியில் 22 வீதமானவர்கள் ஜோபைடன் மீண்டும் போட்டியிடவேண்டும் என விருப்பம் வெளியிட்டிருந்தனர்.
47 வீதமான ஜனநாயக கட்சியினர் ஜோபைடன் மீண்டும் தேர்தலில் போட்டியிடவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
ஜனவரியில் இது 37 வீதமாக காணப்பட்டது.
மீண்டும் போட்டியிடுவது குறித்து ஜோபைடன் அடுத்தவாரம் அறிவிக்கவுள்ள நிலையில் ஜனநாயக கட்சியினர் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோபைடன் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ஜனநாயக கட்சியினர் மத்தியில் தயக்கம் காணப்படுகின்ற போதிலும் ஜனாதிபதியாக அவர் செயற்படும் விதத்தினை ஏற்று;கொள்வதாக 75 வீதமான ஜனநாயக கட்சியினர் தெரிவி;த்துள்ளனர்.