Home Archive by category

"தமிழ் மண்ணில் இருந்துதான் இந்திய வரலாறு தொடங்கப்பட வேண்டும்"

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர பாலகிருஷ்ணன் எழுதிய ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலின் வெளியிட முதல் பிரதியை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.

சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் வைகை நதிக்கரை நாகரீகத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து சுமார் 32 ஆண்டுகள் ஆய்வுக்கு பின்னர் ஆர். பாலகிருஷ்ணன் இந்த நூலை எழுதியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, வைகை கரையில் வரலாற்றை தொடங்க வேண்டும் என அண்ணா சொன்னார் அவர் சொன்னதை பாலகிருஷ்ணன் என்று செய்திருக்கிறார். ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள் தொல்லியல் மீது ஆர்வம் இருந்தாலும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் பணியோடு சேர்த்து தொல்லியல் ஆய்வையும் மேற்கொண்டார். கருணாநிதி இன்று இருந்திருந்தால் இந்த நூலை பார்த்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று குறிப்பிட்டார். அகழாய்வு பொருட்கள் கருப்பும் சிவப்பும் கலந்த நிறங்களில் இருப்பதால் அதை ஏற்க பலருக்கும் மனமில்லை. அண்மைக்கால ஆய்வுகள் தமிழரின் பெருமைகளை மெய்ப்பிப்பதாக இருக்கின்றன தொல்லியல் ஆதாரங்கள் அனைத்திற்கும் என்ற தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்த தான் தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது கீழடி ஒவ்வொரு முறை கேள்விக்கு உள்ளாகும் போது அது தமிழர் பண்பாடா என்று கேள்வி எழும்போது அதனை தாங்கி பிடிப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றார் தமிழகத்தில் பல ஆண்டுகளாக அகழாய்வு நடைபெற்று வருகிறது அந்த தளத்திற்கு தானே நேரில் சென்று பார்வையிட்ட முதல் அமைச்சர் ஸ்டாலின் தான். தமிழுக்கு அவர் தரக்கூடிய முக்கியத்துவம் தான் அதற்கு காரணம் என்றார்.

விழாவில் அரசு முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் பேசும்போது சங்க இலக்கியத்தில் இருந்து அத்தனை இலக்கியங்களையும் மீள் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கீழடி குறியீடுகள் சிந்து சமவெளி குறியீடுகளை ஒத்திருக்கின்றன. செழித்து வளரும் சிந்து வெளி நாகரிகத்துக்கு உரிமை கொண்டாட தமிழுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றார்.

விழாவில் நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் பேசும்போது இந்திய துணைக்கண்டம் முழுவதற்குமான புரிதலுக்கு ஆகச்சிறந்த ஆவணம் சங்க இலக்கியம் மட்டும்தான். சங்க இலக்கியம் போன்று நகரங்களை துறைமுகங்களை கொண்டாடும் இலக்கியம் வேறு ஒன்றும் இல்லை என்று குறிப்பிட்டார். கீழடி இன்னும் முழுவதுமாக தோண்டப்படாத இலக்கியம் என்றால் சங்க இலக்கியம் என்னும் முழுவதுமாக மீள் வாசிக்கப்படாத கீழடி என்று தோன்றுகிறது என்று குறிப்பிட்டார். இந்த விழாவில் அமைச்சர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.

Related Posts