Home Archive by category

இலங்கையில் செய்மதி தளம் - மியன்மாரில் இராணுவதளம்; சீனாவின் நகர்வுகளால் இந்தியா கவலை

சீனாவின் உதவியுடன் இலங்கையில் ராடார் தளத்தை அமைப்பதற்கான முயற்சிகள்  குறித்தும் மியன்மாரில் இராணுவதளமொன்றை அமைப்பதற்கு சீனாஉதவுவது குறித்தும்  இந்தியா கரிசனை கொண்டுள்ளது என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

மியன்மாரின் கொக்கோ தீவுகளில்இராணுவதளமொன்று உருவாக்கப்படுவதும்  இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள தொலைதூர செயற்கை கோள் தரவுகளை பெறும் நிலையமும் பிராந்தியத்தில் சீனாவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த கரிசனையை இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ளன என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இராணுவதளமும்  தொலைதூர செய்மதி நிலையமும் சீனாவின் உதவியுடனேயே நிர்மாணிக்கப்படுவதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளி;ற்கு அருகில் உள்ள கொக்கோதீவுகளில்  இராணுவதளமொன்று உருவாக்கப்படுவதை சமீபத்தைய செய்மதி படங்கள் காண்பித்துள்ளன  என தெரிவித்துள்ள இந்து நாளிதழ் இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள தொலைதூர செயற்கை கோள் தரவுகளை பெறும் நிலையமொன்றை உருவாக்கும் யோசனையை முன்வைத்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன எனவும்  குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் அக்கடமி ஒவ் சயன்சின் கீழ் உள்ள ஏரோஸ்பேஸ் இன்பேமேர்சன் ரிசேர்ச் இன்ஸ்டியுட்டிற்கும் ருகுணுபல்கலைகழகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் கீழ்; இந்த செயற்கை கோள் தளம் உருவாக்கப்படுகின்றது எனவும் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதனை பயன்படுத்தி இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புபட்ட வளங்களை வேவுபார்க்கலாம் பிராந்தியத்தில் தகவல்களை இடைமறித்து கேட்கலாம் என பாதுகாப்பு வட்டாரங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர் என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

Related Posts