Home Archive by category

குறிகட்டுவான் இறங்கு துறையில் மறைத்து வளர்க்கப்பட்ட அரச மரம் வெளித்தோன்றியது

வரலாற்றுச்சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் கடல்வழி மார்க்கத்தின் தொடக்க பிரதேசமான குறிகாட்டுவான்  இறங்குதுறையில் நீண்ட நாட்களாக மறைத்து வைக்கப்பட்டு  வளர்க்கப்பட்ட அரச மரம் ஒன்று இன்று(15) திடீரென மறைப்புக்கள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

குறித்த பகுதியானது  நெடுந்தீவு மக்கள் மற்றும் நயினாதீவு மக்கள் ,சுற்றுலாப்பயணிகள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் ஒன்றுகூடும் துறைமுகப்பகுதியாகும்.

அனைத்து மதத்தவர்களும்  பாவிக்கும் பொதுப்பகுதியில் பௌத்த மதத்தை மாத்திரம் முன்னுரிமைப்படுத்தியதாக அரச மரம் ஒன்று கடற்படையினரின் ஒத்துழைப்போடு வளர்க்கப்பட்டு வந்த நிலையில் குறித்த பகுதியில் புத்தர் வந்தமர்ந்து குடியேறுவதற்கான முன்னேற்பாடாக இது இருக்குமா? எனவும் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts