Home Archive by category

சீனாவில் பறவைக் காய்ச்சலால் முதல் உயிரிழப்பு பதிவானது

சீனாவில் பறவைக் காய்ச்சலுக்கு (H3N8) முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

குவாங்டாங் (Guangdong) மாகாணத்தின் Zhongshan நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

அந்த பெண் நோய் பாதிப்பிற்கு உள்ளாவதற்கு முன்பு ஒரு கோழிபண்ணைக்கு சென்றதாகவும் அங்கு சேகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாதிரிகளில் பறவைக் காய்ச்சலுக்கு சாதகமான வைரஸ்கள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இது சீனாவில் பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாகும். 

H3N8 வைரஸ் மனிதர்களுக்கும் பரவுவது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது. 2022-ம் ஆண்டு மத்திய சீனாவில் 4 வயது சிறுவனுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. அதில் இருந்து குணமடைந்தான். பின் அதே ஆண்டு மே மாதம் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் பாதிக்கப்பட்ட போது, அச்சிறுவனுக்கு இலேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தன. 

இதற்கிடையேதான், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து, சீனாவில் பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 
இன்று வரை பல நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கொரோனாவால் உலகம் முழுதும் இலட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  

Related Posts