Home Archive by category

எரிபொருள் இறக்குமதியில் பெரும் ஊழல்; வெளிப்படுத்திய ஜே.வி.பி

"ஐக்கிய அரபு ராச்சியத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து மசகெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிறுவனத்திடம் இருந்து ஒரு பீப்பாய் மசகெண்ணெய் 131.90 டொலர்களுக்கு கொள்வனவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் ஒரு கப்பலுக்கு 4 மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்படுவதாகவும் ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாக எண்ணெய் பீப்பாய் கொள்வனவின் போது அங்கீகரிக்கப்பட்ட பிரீமியம் கொடுப்பனவு தொகை (தரகு பணம்) 8 டொலருக்கும் குறைவாக இருக்கின்ற போதும், இந்த நிறுவனத்துக்கு இலங்கை 24 டொலர்களை (பீப்பாய் ஒன்றுக்கு) மேலதிகமாக வழங்குகிறது.

நாட்டில் மக்கள் எரிபொருளுக்காக அவதியுறும் நிலையில், அரசாங்கத்தின் சில தரப்பினர் எண்ணெயில் ஊழல் புரிவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

Related Posts