Home Archive by category

ரஷ்யா மீது கனடா விதித்துள்ள தடை

ரஷ்ய எஃகு மற்றும் அலுமினியம் மீதான கனடாவின் தடையை மற்ற நாடுகளும் பின்பற்றும் என உக்ரைன் நம்பிக்கை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் அனைத்து அலுமினியம் மற்றும் எஃகு பொருட்களின் இறக்குமதிக்கு கனடா தடை விதித்திருப்பது கிய்வில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் உக்ரைனின் பிரதம மந்திரி டெனிஸ் கனடாவின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து ருவிட்டர் பதிவொன்றை இட்டிருந்தார்.

கனடா அறிவித்துள்ள குறித்த தடையானது முடிக்கப்பட்ட மற்றும் முடிக்கப்படாத தயாரிப்புகளை உள்ளடக்கியது, மேலும் அலுமினிய தாள்கள், அலுமினிய கொள்கலன்கள் மற்றும் எஃகு குழாய்கள் மற்றும் குழாய்கள் போன்ற பொருட்களின் இறக்குமதியை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Posts