போலந்து நாட்டின் நதியில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்

ஜெர்மன் நாட்டின் எல்லையையொட்டிய போலந்து நாட்டின் நதியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அங்கு மீன்கள் செத்ததற்கு நதி நீரில் ஏற்பட்டுள்ள மாசுபாடே காரணம் என்று கூறப்படுகிற நிலையில் அதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதோடு இந்த பிரச்சனையால், அந்த நதி நீரை யாரும் பயன்படுத்த வேண்டாம் என போலந்து அரசு எச்சரித்துள்ளது.