Home Archive by category

கனேடிய தூதரகத்தின் உயர் அதிகாரி கலந்து சிறப்பித்த 100ஆவது அறுவை சிகிச்சை

கனடா - டொரண்டோவை மையமாக கொண்டு இயங்கி வரும் செந்தில் குமரன் நிவாரண நிதியம் தனது 100ஆவது இலவச இதய அறுவை சிகிச்சையை லங்கா மருத்துவமனையில் கொண்டாடியது. 

இந்த நிகழ்வில், கொழும்பில் உள்ள கனேடிய தூதரகத்தின் உயர் அதிகாரி டானியல் பூட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.  

செந்தில் குமரன் நிவாரண நிதியம் பல காலம் இதய நோயுடன் போராடி வரும் நோயாளர்களுக்கு இலவச சத்திரசிகிச்சைகளை  வழங்கி அவர்களின் உயிரை காப்பாற்றி வருகின்றது. 

இந்த நிலையில், தங்களது வெற்றிகரமான 100ஆவது இதய அறுவை சிகிச்சையை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் லங்கா மருத்துவமனையில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

இச்சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில், லங்கா வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வசீகர விழாவிற்கு, கொழும்புவில் உள்ள கனேடிய தூதரகத்தின் உயர் அதிகாரி  டானியல் பூட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

கனடாவிலிருந்து திரு திருமதி செந்தில் குமரன், லங்கா மருத்துவமனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி தீப்தி லொகு ஆராச்சி, யாழ். போதனா மருத்துவமனையின் இதய நிபுணர்  குருபரன், இதய சத்திர சிகிச்சை நிபுணர்  காந்திஜி மற்றும் பல மருத்துவர்களும், இந்த திட்டத்தினால் பயனடைந்த பயனாளிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

100ஆவது பயனாளியான முகமாலையினை சேர்ந்த 12 வயது சிறுமியான வைஷ்ணவி சிறப்பு விருந்தினரை மாலையிட்டு கௌரவப்படுத்தினார். இது  பலருக்கு நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியது.

மருத்துவக் குழுவினரையும், செந்தில் குமரனின் இந்த சேவையினையும் திரு டானியல் பூட் வாழ்த்தி உரையாடியதோடு மருத்துவ குழுவினருக்கு பாராட்டு பத்திரங்களை வழங்கி கௌரவித்தார். இந்த திட்டத்தினால் பயன் பெற்ற அநேகர் இலங்கை முழுவதிலும் இருந்து  வருகைததந்திருந்தமை சிறப்பம்சமாகும்.  

Related Posts