Home Archive by category

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்! அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய புலனாய்வு அறிக்கையில் இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளினால் அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் இலங்கை அரசாங்கம் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.

எவ்வாறாயினும், இலங்கையில் இன்னமும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம், போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.

இதனிடையே, 2009 இல் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் தோற்கடித்த போதிலும், புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் செயலில் உள்ளது என்று பயங்கரவாதம் பற்றிய அமெரிக்க அறிக்கை கூறுகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதம் தொடர்பான அறிக்கைகள் (CRT) 2009 இல் இலங்கை அரசாங்கத்தின் கைகளில் இராணுவத் தோல்வியை எதிர்கொண்ட போதிலும், விடுதலைப் புலிகளின் சர்வதேச அனுதாபிகள் மற்றும் நிதியுதவி வலையமைப்பு நீடித்து வருவதாகக் கூறியுள்ளது. 

Related Posts