Home Archive by category

உக்ரைனில் இரகசிய சித்ரவதை முகாம்கள்

ரஷ்ய கட்டுப்பாட்டில் வைத்திருந்த கெர்சன் நகரில் சித்திரவதை முகாம்களை ரஷ்யா அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரையிலான 8 மாதங்களாக அந்நகரை தனது கட்டுப்பாட்டில் ரஷ்யா வைத்திருந்த நிலையில்,கெர்சன் நகரில் சித்திரவதை முகாம்களை ரஷ்யா அமைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

உக்ரைன் மற்றும் உக்ரைனுடன் தொடர்பில் உள்ளவர்கள் அந்த முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கெர்சன் நகர் ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், தெருக்களில் நடந்து சென்ற பலர் ரஷ்ய வீரர்களால் பிடிபட்டு அடைக்கப்பட்ட நிலையில்,கடந்த ஆண்டு நவம்பரில் கெர்சன் நகரை உக்ரைன் இராணுவம் தன்வசப்படுத்தியுள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதணையில் சித்திரவதை முகாம்கள் பற்றிய விபரங்கள தெரியவந்துள்ளன. இதுபோன்று கெர்சனில் 20 சித்திரவதை அறைகள் காணப்பட்டுள்ளன.

இதன்படி, உயிர் தப்பிய ஆயிரம் பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் மேற்கூறிய பல விபரங்கள் தெரியவந்துள்ளன.

இந்த முகாம்களில் உள்ள 400 பேரை காணவில்லை எனவும் அவர்கள் உயிரிழந்துவிட்டனரா? அல்லது ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டனரா? என்பதும் தெளிவாக தெரியவில்லை எனவும் ஜோர்டாஷ் கூறியுள்ளார். 

Related Posts