இராணுவ தளபதியின் பதவி பறிப்பு; உக்ரைன் அதிபரின் அதிரடி

உக்ரைன் நாட்டு இராணுவ தளபதியான எட்வர்ட் மிகளோவிச் மோஸ்க்ளோவை, அந்நாடு அதிபர் ஜெலன்ஸ்கி, எந்தவித காரணமும் சொல்லாமல் பதவியிலிருந்து நீக்கியுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய பதவி பறிப்புக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் உக்ரைன் அரசு நிர்வாகம், ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பாக பல அரசு அதிகாரிகளை கடந்த சில மாதங்களாக கையும் களவுமாக பிடித்துவருகிறது.
அந்தவரிசையில்தான் இவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது. என்றாலும் கூட இராணுவத் தளபதி, மோஸ்க்ளோவ் எந்தவித ஊழலிலும் ஈடுபடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.