புதிய வைரஸ்கள் உருவாகலாம்! விஞ்ஞானி சௌமியா விடுத்துள்ள எச்சரிக்கை

புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது எம்முடன் உள்ள கோவிட் வைரஸ் தொற்றினை நாமே சிறந்த சுகாதார வழிமுறைகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியினால் தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காய்ச்சல் வருவது சாதாரணமானது என்ற போதிலும் , காய்ச்சலுக்கான காரணத்தினை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கோவிட்வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்கா மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.