Home Archive by category

ஈழத்து படைப்புகளை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்ற பத்மநாப ஐயருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சர்வதேச பத்திரிகையொன்றின் ஆண்டு நிறைவையோட்டி (2013 – 2023) வாழ்நாள் சாதனையாளர் விருது “நூலவர்” இ. பத்மநாப ஐயர்க்கு பெருமையுடன் வழங்கப்படுள்ளது.

ஈழத் தமிழரின் போராட்டம் தீவிரம் அடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் போராட்ட அமைப்புகளின் வெளியீடுகளையும், பிரசுரங்களையும் ஆவணங்களையும் சேகரிப்பதில் அக்காலத்தில் அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருந்தன.தற்போதய இலத்திரனியல் வசதிகள் அப்போது இருக்கவில்லை.

ஆயினும் ஈழப் புரட்சி அமைப்பும், அதன் மாணவர் அமைப்பான GUYS ஆவணங்களை காக்கும் செயற்திட்டத்தில் முனைப்பாக இருந்தன. இதற்கென பிராந்திய வாரியங்களாக ஆவணக் காப்பகம் (Documentation Unit) அமைக்கப்பட்டு பல நூறு ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன.

ஈழப் போராட்டத்தில் ஆவணங்களை காப்பது என்பது ஒரு முக்கியமான செயற்பாடாக அமைந்தது. அன்றைய காலத்தில் பல்வேறு போராட்ட அமைப்புகள் இருந்தாலும் எல்லா அமைப்புகளும் இத்தகைய ஆவணம் பேணுதலை செய்யவில்லை. ஆனாலும் மிக முக்கியமான போராட்ட அமைப்புகள் தங்களது பிரச்சார வெளியீடுகளையும், நூல்களையும் சேகரித்து, சேர்த்து வந்ததும் போரின் உச்சகட்டத்தில் அவற்றுள் பல அழிந்துபோனதும் அனைவரும் அறிந்ததே.

ஆனாலும் ஈரோஸ் அமைப்பும், அதன் மாணவ அணியான “மாணவர் இளைஞர் பொது மன்றம்”  மிக முக்கியமாக அக்கால கட்டத்தில் பல்வேறு ஆவணங்களை சேகரித்து அதனை ஒரு முக்கிய மையமாக ‘ஆவணக்காப்பகம்’என்ற பெயரில் சேகரித்து வந்தனர்.

ஆனால் கொடூரமாக போர் நடந்த காலத்தில் அரச படைகளால் நூலகங்கள் எரிக்கப்பட்டதை போல, பல ஆவண காப்பக மையங்களும் அழிந்துபோயின. 

ஈழத்து படைப்புகளை தமிழகத்திலும் சர்வதேச அளவிலும் எடுத்துச் சென்றதில் பத்மநாப ஐயரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையில் அவர் மிகப்பெரிய இணைப்பாலமாக விளங்கினார்.  இளமையில் பல அறிவியல் கட்டுரைகளை ஈழத்துப் பத்திரிகைகளில் இ. பத்மநாபன் என்ற பெயரில் எழுதியுள்ளார்.

இலங்கையிலும் தமிழகத்திலும் நவீன தமிழ் இலக்கியத்திலும் கலைப்படைப்புகளிலும் ஆழ்ந்த அக்கறையும் ரசனையும் கொண்டுள்ள பத்மநாப ஐயர் நீண்ட கால இலக்கியப் பங்களிப்புக்காக கனடாவில் இயல் விருது பெற்றவர்.

நீண்ட காலமாக தமிழர் தாயகத்தில் நூலகங்களும், ஆவணக் காப்பகங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டதால் ஈழத்து நூல்களுக்கான நூலக திட்டத்தின்படி இணைய நூலகம் ஒன்று மின்னம்பலத்தில் பவனி வரச் செய்த பெருமை பத்மநாப ஐயருக்கு உரித்தானதாகும்.

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் வழங்கும் இயல் விருது 2004 ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts