Home Archive by category

கனடா குடியுரிமை - அரசின் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள்

கனடாவில் ஜூன் மாதத்திலிருந்து புதிதாக குடியுரிமை உறுதிமொழி செய்பவர்கள் நீதிமன்றம் செல்லாமலே இணையத்தின் மூலம் செய்யலாம் என புதிய திட்டத்தை கனேடிய அரசு அறிவித்ததற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கனடா நாட்டில் புதிதாக குடியுரிமை பெறும் குடிமக்கள் அதற்கான உறுதிமொழியை இணையம் மூலமே செய்து கொள்ளலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முன்னர் குடியுரிமை பெற நீதிமன்றத்திற்குச் சென்று நீதிபதியின் முன்னிலையில் குடியுரிமை பெற வேண்டியிருக்கும்.

அதனால் குடியுரிமை பெறுவதற்கான கால அவகாசம் அதிகமாவதால் எளிதில் வீட்டிலிருந்த படியே இணையத்தின் ஒரு கிளிக்கில் குடியுரிமை பெற முடியுமென அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை பல தசாப்தங்களாக புதிய தலைமுறையினருக்கான சடங்கை கடுமையாக மாற்றும், விசைப்பலகையில் கிளிக் செய்வதன் மூலம் கனடிய குடியுரிமையின் அர்த்தத்தை, மேலும் நீர்த்துப்போகச் செய்யும் என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நிலையில் "இது கனேடிய குடிமகனாக மாறுவதன் முக்கியத்துவத்தை மேலும் மலிவுபடுத்துகிறது. முகப்புத்தகம் அல்லது டிக்டோக் கணக்கை உருவாக்குவது போலவே குடிமகனாக மாறுவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கிளிக் செய்வது எளிது, ”என்று கனேடிய குடியுரிமைக்கான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் பெர்ன்ஹார்ட் தெரிவித்துள்ளார்.

Related Posts