Home Archive by category

இந்திய அரசாங்கத்திடம் மணிவண்ணன் முன்வைத்துள்ள கோரிக்கை

யாழ். மாநகரத்திற்குள் கட்டிடங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.அபிவிருத்தியினை தந்தால் சந்தோசம். அதற்கான கோரிக்கையினை இந்திய அரசாங்கத்திடம் முன்வைக்கின்றேன் என யாழ். மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபை மற்றும் சைவசமய விவகாரக்குழுவின் எற்பாட்டில் நல்லையம்பதி அலங்காரக்கந்தன் மஹோற்சவத்தினை முன்னிட்டு வெளியிடப்படும் 30வது நல்லைக்குமரன் மலர் வெளியீடு யாழ். நாவலர்கலாசார மண்டபத்தில், யாழ். மாநகர சபையின் ஆணையாளர் கவிஞர் த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசாங்கத்தினால் யாழ். மாநகரப்பகுதியில் பல உதவிகள் செய்ய வேண்டும். யாழ்ப்பாண மாநகர சபைக்குரிய நகர மண்டபம் யுத்தத்தினால் அழித்து ஒழிக்கப்பட்டு தற்காலிகமான இடத்திலே மாநகர சபை இயங்கிக்குகொண்டு இருக்கின்றது. அதுவும் நல்லைக்கந்தனின் இடத்துக்கு சொந்தமான ஆதனத்திலே தற்காலிகமாக மாநகர சபை இயங்கிக்கொண்டு இருக்கின்றது.

கண்ணுக்கு எட்டிய வசதிகள் எதுவும் அங்கு எதுவும் கிடையாது. இந்த சந்தர்ப்பத்திலே நல்லூர் கந்தனின் தர்மகர்த்தாவின் வடியமைப்பிலே கட்டிக்கொண்டு இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே இது இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டிக்கொண்டு இருந்த சூழ்நிலையிலே, அதிலும் அதற்போது எற்பட்டிருக்கு பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாண மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதிக்கான கட்டுமானப்பணிகளை இடைநிறுத்துமாறும், அதனை கைவிடுமாறும் இலங்கை மத்திய அரசாங்கத்தினால் முடிவு எடுக்கப்பட்டு அந்த ஒப்பந்தம் ரத்து செய்வதற்கான நடவடிக்கை மிக விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றது.

அதிலும் அரைவாசி நிர்மாணப்பணிகள் மாத்திரம் இடம்பெற்று இருக்கின்றது. இதில் இயங்க முடியாத சூழ்நிலையில் கட்டுமானப்பணிகள் எல்லாமே கைவிடப்படுகின்ற நிலையில் காணப்படுகின்றது. அந்த ஒப்பந்தத்தினை ரத்து செய்யாமல் அதனையும் தொடர்ந்து முன்னெடுத்து மாநகர சபைக்கான பாவனைக்கான எடுத்துகொள்ள வேண்டும் என்ற பல இடம் முனைப்பு செய்து வருகின்றோம்.

யாழ்.மாநகர சபைக்கான நிதியினை ஒட்டுமொத்தமாக பயன்படுத்த தயாராக இருக்கின்றது. இது எமது சக்திக்கு அப்பாற்பட்ட விடயமாக இருக்கின்றது.

அந்தவகையில், ஆரம்பத்தில் இதற்கான கட்டிட மதிப்பீடு 1600 மில்லியனாக இருந்தது. அதில் 940 மில்லியனுக்கான நிதிகளை செலவுகள் செய்யப்பட்டு இருக்கின்றது.

845 மில்லியன் ரூபா நிதியுதவி தேவையாக இருக்கின்றது.  தற்போதைய விலை மதிப்பீடு அடிப்படையில் 2000 மில்லியனாக தாண்டி நிற்கின்றது. அதற்காக இந்தியாவிடம் அதற்கான கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.அதனை இந்திய அரசாங்கம் செய்து தருமாறு இருந்தால் யாழ். மாநகர சபை மீண்டும் தமது சொந்த காலில் நிற்கின்ற இடத்தினை பிடிக்கும் என்ற நட்பு ஆசையில் வேண்டிக்கொள்கின்றேன்.

அதனையும் தாண்டி தந்தையர் நாடு என்பதை தாண்டி இந்திய தொப்பிள் கொடியான இந்தியா மன்றாட்டமாக கேட்பது கால காலமாக உரிமைக்காக போராடியவர்கள் அந்த இனத்திற்காக விடுதலைக்காக கௌரமாக வாழ்வுக்காக இருப்பினை தக்கவைப்பதற்காக இந்தியா தன்னான உதவிகளை பொருளாதார ரீதியாக உரிமைகளை கௌரமாக பெற்று வாழ்வதற்கு உரிமைக்காகவும்,இந்தியா உதவ வேண்டும் அதுதான் தலையான கோரிக்கை அதனையும் இந்தியா செய்யும் என்று நம்புகின்றேன்.

இந்தியாவினை தந்தையர் நாடாக பார்க்கின்றோம்.தொப்பிள் கொடி உறவுகள் வாழ்கின்ற இடமாக பார்க்கின்றோம்.அது இந்தியாவின் பொருளாதாரத்தின் பாதுகாப்புக்கும், அந்த வகையில் வடக்கு,கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் இந்தியாவின் நலனுக்கு எதிராக விரோதங்களுக்கு செல்லமாட்டார்கள் உறுதியினையும், உத்தரவாதத்தினையும் வழங்குகின்றேன் என்றும் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார.

இந்நிகழ்வில், யாழ். இந்திய உதவித்துணைத்தூதரகத்தின் தூதுவர் ஸ்ரீமான் ராகேஸ் நடராஜ்,இந்து கலாச்சார அலுவல்கள் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், மற்றும் சமயத்தவைர்கள் மாநகர சபையின் உறுப்பினர்கள்,நிர்வாக உத்தியோகத்தர்கள்,கல்வியாளர்கள் சமயபெரியார்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts