வெளியேறினார் கோத்தா

சிங்கப்பூரில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் சென்ற கோட்டாபயவுக்கு 15 நாட்கள் அங்கு தங்கியிருக்க விசா வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், குறித்து விசா காலம் முடிவடைந்த பின்னர் மேலும் 15 நாட்களுக்கு கோட்டாபயவின் விசா காலம் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் கோட்டாபயவின் சிங்கப்பூர் விசா காலம் முடிவடைந்துள்ளது.
இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நாட்டுக்குள் அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை தாய்லாந்து ஏற்றுக்கொண்ட நிலையில்,முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து பேங்காக் செல்லும் விமானத்தில் ஏறியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.