Home Archive by category

ரஷ்யாவை திணறடித்த உக்ரைன் - விமான தளம் தாக்கி அழிப்பு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கிரிமியாவில் உள்ள இராணுவ விமான தளத்தின் மீதான தாக்குதல் உக்ரைனுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் மாஸ்கோவிற்கு சங்கடமாகவும், கியேவிற்கு பெரும் ஊக்கமாகவும் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2014 இல் ரஷ்யாவால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட கிரிமியா, ரஷ்யர்கள் வாழ்வதற்கும், விடுமுறை எடுப்பதற்கும் பாதுகாப்பான புகலிடமாக இருந்து வருகிறது. தெற்கு உக்ரைனில் வான்வழித் தாக்குதல்களை நடத்த ரஷ்ய இராணுவம் Saky விமான தளத்தைப் பயன்படுத்தியது.

உக்ரேனிய சிறப்புப் படைக் குழு இந்தத் தாக்குதலை நடத்தியது, இந்த தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது மிகவும் பயிற்சி பெற்ற உக்ரேனிய வீரர்களின் திறனை வெளிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத் தளத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் துல்லியமான அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஏழு போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் மேலும் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் உக்ரேனிய பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்பது போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். எவ்வாறாயினும், போர் சேத மதிப்பீடுகள் (BDA) சில நேரங்களில் தீர்மானிக்க சில நாட்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உக்ரேனியர்களிடையே இந்தத் தாக்குதலுக்குக் கிடைத்த வரவேற்பை மிகைப்படுத்துவது கடினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகத் தளங்கள் அதைக் கொண்டாடி வருகின்றன, செய்தித் தளங்கள் இன்று இதைப் பரவலாகப் பதிவு செய்துள்ளன.

இந்த போரில் வேகம் முன்னும் பின்னுமாக மாறியுள்ளது, ஆனால் நீண்ட தூர மேற்கத்திய ஆயுதங்கள் மற்றும் இது போன்ற துணிச்சலான தாக்குதல்களின் கலவையானது உக்ரைனுக்கு ஆதரவாக விடயங்களை மாற்ற உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts