மின்னொளியில் ஒளிரும் யாழ்.மணிக்கூட்டு கோபுரம்

கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டை வரவேற்கும் முகமாக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக யாழ்ப்பாணம் மணிக்கு கூட்டு கோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கான கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மணிக்கூட்டு வளைவினை திறந்துவைத்தனர்.