உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது?; வெளியாகியிருக்கும் தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒரு வருடம் தாமதமாகலாம் என்றாலும், வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 28க்குப் பிறகு தொடங்கும் என்று நம்பத்தகுந்த தகவல் தெரிவிக்கிறது.
தேர்தல் மார்ச் 20க்கு முன் நடத்தப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், முதல் கட்டமாக, தேர்தல்கள் ஆறு மாதங்கள் தாமதமாகலாம், அதன் பிறகு அது இன்னும் ஆறு மாதங்கள் தாமதமாகும் என்று உயர் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனிப்பெரும் கட்சியாக தேர்தலுக்கு தயாராகி வருகின்றது, எனினும் பொதுஜன பெரமுன தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சமகி ஜன பலவேகய மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையில் ஒரு கூட்டணி அமையலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.