Home Archive by category

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகைக்காக ஜனாதிபதியினால் வழங்கப்படும் விசேட பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் பலரை விடுதலை செய்ய சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, சிறையிலுள்ள கைதிகளுக்கு இந்த சிறப்பு பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது.

இதன்படி, நாளை 25 ஆம் திகதிக்குள் சிறையிலிருக்கும் கைதிகளின் தண்டனைக்காலத்தை கருத்தில் கொண்டு பொதுமன்னிப்பு வழங்கவும் அபராதத் தொகையைச் செலுத்தாத சிறைத் தண்டனைக் கைதிகள் அனுபவிக்கும் தண்டனையின் மீதிப் பகுதியை இரத்து செய்யவும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(உயர்நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து) இருப்புத் தொகையை இரத்து செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு சிறப்பு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு உரிமையுண்டு.

சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது விடுதலைக்கு உரித்துடைய கைதிகளின் பெயர்களை தயாரித்து வருவதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Related Posts