உலகக்கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியை வரவேற்று ரசிகர்கள் கொண்டாட்டம்

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் பிரான்ஸை வீழ்த்திய அர்ஜெண்டினா வீரர்கள் தனி விமானம் மூலமாக பியூனஸ் அயர்ஸில் வந்து இறங்கினர். பின்னர், திறந்தவெளி பேருந்தில் தேசியக்கொடியை ஏந்தி பேரணியாக சென்ற வீரர்களுக்கு சாலையின் வழிநெடுகிலும் லட்ச கணக்கானோர் பாடல்களை பாடி உற்சாக முழக்கத்துடன் வரவேற்பு அளித்தனர்.
கால்பந்து நாயகன்களை வரவேற்பதற்காக தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டதால் ஆடல், பாடல்களுடன் களைகட்டிய கொண்டாட்டங்கள் அர்ஜெண்டினா தலைநகரை அதிர செய்தது. இதனால், பியூனஸ் அயர்ஸில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சியளித்தன.