நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, நத்தார் வழிபாடுகள் நடைபெறும் தேவாலயங்கள் மற்றும் மக்கள் கூடும் நகரங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.