யாழ். மாநகர சபையின் பாதீடு தோற்கடிப்பு - ஈ.பி.டி.பி வெளிநடப்பு

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபையின் முதல்வரால் இன்றையதினம் சபையில் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட நிலையில் ஈ.பி.டி.பி வெளிநடப்பு செய்துள்ளதோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியன எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
அதேவேளை முதல்வரின் ஆதரவு அணியினர் மட்டும் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.