Home Archive by category

உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்... அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று தொடங்கி தமிழகத்தின் அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.  கவர்னர் மற்றும் முதலமைச்சர் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.  சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ-வாக உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.  இவர் வெற்றி பெற்ற உடனே அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.  இருப்பினும் கடன் ஓர் ஆண்டாக எந்தவித பொறுப்புகளும் வழங்கப்படாமல் இருந்து வந்தது.  கட்சி பணி மற்றும் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார்.  இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்று அதிரகார்வப்பூர்வ தகவல் வெளியானது.  

உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவிற்கு பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.  திமுக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், முன்னணி அரசியல்வாதிகள் என அனைவருக்கும் அரசு சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது.  இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமானம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பாமக தரப்பில் ஜி.கே மணி, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஆ.ராசா, அமைச்சர் ஐ.பெரியசாமி, பொன்முடி, விசிக சார்பில் சிந்தனை செல்வன், அமைச்சர் ஏ.வ வேலு, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை, நிதியமைச்சர் பி.டி.ஆர், மேயர் பிரியா வருகை ஆகியோர் வருகை தந்தனர்.  

முதலமைச்சரும் தனது தந்தையுமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று பொறுப்பை ஏற்றுக்கொண்டார். உதயநிதி ஸ்டாலின்.  துர்கா ஸ்டாலின்,கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.   பின்பு அமைச்சரவை குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.

Related Posts