குற்றங்கள் நிகழும் நாடுகளின் பட்டியல் - இலங்கைக்கு ஆறாவது இடம்

அண்மையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் நிகழும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இலங்கையும் உள்ளமை தெரியவந்துள்ளது.
சர்வதேச காவல்துறையுடன் தொடர்புடைய என்.ஏ.ஆர்.சி (NARC) வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையினுடைய குற்றச் சுட்டெண் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த அறிக்கையில் இலங்கையினுடைய குற்றச் சுட்டெண் 4.64 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் நிகழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை ஆறாவது இடத்தில உள்ளது.
இலங்கையில் உள்ள பாதாள உலகக் குழுக்கள்
குற்றங்கள் நிகழும் நாடுகளின் பட்டியல் - இலங்கைக்கு ஆறாவது இடம்: வெளியாகிய அறிக்கை | Sri Lanka
இதேவேளை, இலங்கையில் 30 பாதாள உலகக் குழுக்கள் இருப்பதும் இந்த அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.
கொழும்பு, தெமட்டகொடை, மாளிகாவத்தை, மருதானை, நுகேகொடை மற்றும் வட கொழும்பு போன்ற பிரதேசங்களில் குறித்த பாதாள உலகக் குழுக்கள் இயங்குவதாக தெரியவந்துள்ளது.