Home Archive by category

கோட்டாவால் நாட்டுக்கு 6 பில்லியன் ரூபா இழப்பு

ஜப்பானிய கடனுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு-மாலபே இலகு ரயில் திட்டத்தை இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்ததன் மூலம் 5,978 மில்லியன் ரூபா வீண் விரயமாகியுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு வீதிகளின் போக்குவரத்து நெரிசலை குறைத்து பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

2016 இல் ஜப்பானிய கடன் உதவியின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்ட இலகு ரயில் திட்டத்தை 2020 இல் இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ததை கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்ததன் மூலம் 5,978 மில்லியன் ரூபா வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts