வக்ர நிவர்த்தி அடையும் புதன்; புத்தாண்டில் வெற்றிகளை குவிக்க உள்ள ‘சில’ ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதன் கிரகம் 2022 டிசம்பர் மாதத்தில் இரண்டு முறை மாறுகிறது. இதற்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறது. ஜனவரி 13-ம் தேதி புதன் சஞ்சாரம் சிலருக்கு பல நன்மைகளைத் தரும். புதனின் வக்ர நிவர்த்தியினால், இவர்களுக்கு பணவரவும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் தரும். இதனுடன், புத பகவான் உரையாடல், தர்க்கம் மற்றும் பேச்சு ஆகியவற்றை வலுப்படுத்துவார். இந்நிலையில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி அதிகப் பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
புதனின் வக்ர நிவர்த்தியினால் அதிக பலன் பெறும் ராசிகள்:
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி மிகவும் சுப பலன்களைத் தரும். அவர்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும். வணிகத்தில் ஒரு பெரிய ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்படலாம் அல்லது ஒரு பெரிய ஆர்டரைப் பெறலாம். திடீர் பண ஆதாயம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தைப் பெறுவீர்கள். பேச்சு பலத்தால் ஆதாயம் கிடைக்கும். பேச்சு சம்பந்தமான வேலை அதாவது மார்க்கெட்டிங், மீடியா போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் பலன் அடைவார்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு.
கும்பம்: புதன் சஞ்சாரத்தில் இருப்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு உடனடி பலன்கள் கிடைக்கும். அவர்களுடைய வருமானத்தில் உயர்வு இருக்கும். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை வலுப்பெறும். பணம் பெற புதிய வழிகள் அமையும். தொழிலில் பெரிய வாய்ப்புகள் அமையும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய வெற்றியை அடைய முடியும்.
மீனம்: புதனின் சஞ்சாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மீன ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாகவும் பண ரீதியாகவும் பல நன்மைகளைத் தரும். தொழிலில் பதவி உயர்வு அல்லது பெரிய சாதனைகளை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுவரை தடைப்பட்டிருந்த வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். நெருங்கியவர்களின் உதவியால் அனைத்து வேலைகளும் முடிவடையும்.