Home Archive by category

'ஆடம்பர செலவுகள் வேண்டாம், பணத்தை சேமித்து வைக்கவும்' - ஜெஃப் பெசோஸ் அறிவுரை

2023- ம் ஆண்டிற்குள் வரக்கூடிய பொருளாதார நெருக்கடியை தவிர்க்க, பணத்தை சேமித்து வைக்குமாறு அமெரிக்கர்களுக்கு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அறிவுறுத்தியுள்ளார்.

பணவீக்கத்துடன் போராடும் அமெரிக்கர்கள், வரும் மாதங்களில் நாடு பொருளாதார வீழ்ச்சியைக் காணக்கூடும் என்பதால் ஆடம்பர பொருட்களை வாங்க வேண்டாம் உலகின் முன்னணி பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர்“ நீங்கள் ஒரு பெரிய டிவி, கார் உள்ளிட்ட வாகனம், குளிசாதனப்பெட்டி போன்ற எந்த பொருளை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தாலும், அதனை ஒத்திவையுங்கள். அந்த பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், என்ன நடக்கிறது என்று பாருங்கள். எப்போது வேண்டுமானாலும் பிரச்சினை தலைதூக்கலாம்" என்று கூறினார்.

பெசோஸின் கருத்தை விமர்சித்துள்ள பத்திரிகையாளர் மைக் எல்கன், “அமெரிக்கர்கள் பொருட்களை வாங்குவதை நிறுத்துமாறு ஜெஃப் பெசோஸ் பரிந்துரைத்த பொருட்கள் அமேசானில் நீங்கள் வாங்க முடியாத சில தயாரிப்புகளாகும். அமேசானில் வாங்கும் பணத்தை மிச்சப்படுத்த அமேசானில் மக்கள் வாங்காத பொருட்களுக்கான செலவினங்களைத் தள்ளி வைக்குமாறு பெசோஸ் மக்களை வலியுறுத்துகிறார்' என அவர் விமர்சித்துள்ளார்.

பணவீக்கம், கோவிட் ஏற்படுத்திய தாக்கம், உக்ரைன் - ரஷ்யா போர், பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. அமேசான் நிறுவனமும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கங்களில் ஒன்றாக இது உள்ளது. ஏற்கெனவே ட்விட்டர், மெட்டா போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான சிஸ்கோவும் 4000 பணியாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலக மக்களே அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Related Posts