Home Archive by category

தமிழ் மக்களின் காணிகளை விற்கவா பாதுகாப்பு தரப்புக்கு அதிக நிதி?; கேள்வி எழுப்பிய சித்தர்

பாதுகாப்பு பிரிவுக்கு 21 இனை விட 22 கூடுதலாக இருந்தது.22 ஐ விட இன்று 23 இன்னும் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.யுத்தம் முடிவடைந்து விட்டது .ஆகவே பாதுகாப்புக்கு அமைச்சுக்கு தொடர்ந்தும் ஏன் பெரிய நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டு வருகின்றது.என்ற கேள்வி பலர் மத்தியில் இருக்கின்றது என்று நாடளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எங்கள் மத்தியிலும் இருக்கின்றது.எங்களை பொறுத்த மட்டில் பார்க்கின்ற பொழுது ஒன்று தெரிகிறது. இந்த கூடுதல் நிதி எதுக்காக பாவிக்கப்படுகின்றது என்றால் எங்கள் பகுதிகளில் இருக்கின்ற காணிகளை அபகரிப்பதுக்கு ,காணிகளை பிடித்து வைத்துக்கொண்டு அதை வெல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவது .இப்படியாகத்  தான் அந்த நிதிகள் பாவிக்கப்படுகின்றது.

யுத்த காலங்களில் நீங்கள் யுத்தம் புரிவதற்காக நீங்கள் வாங்கிய ஆயுதங்கள் ,தளபாடங்கள் சம்மந்தமாக செலவுகளை பார்க்கலாம்.அவைகள் கூட இன்று இல்லாத நேரத்தில்  கூட இந்த நிதிகள் எதற்காக ?ஒதுக்கப்படுகின்றது.இன்றும் இந்த நாடு யுத்த மனப்பான்மையில் தான் இருக்கின்றதா? இதனை நாங்கள் மிகத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே இந்த பாதுகாப்புக்கு அமைச்சுக்கு ஒத்துக்கப்படுகின்ற ,நிதி நிச்சயமாக குறைத்துக்கொள்ள வேண்டும்.அரைவாசியாக கூட வெட்டிக்கொள்ள முடியும்.அதேபோல் இன்றைய நாளாந்த வருமானத்தினை எதிர்பார்த்து வாழுகின்ற மக்கள் ,அந்த குடும்பங்கள் பட்டினியாக இருக்கின்ற நிலைமையை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.அவர்களுக்கான நிவாரணங்களை சரியான முறையில் கொடுக்கப்பட வேண்டும்.அது சரியாக கவனிக்க வேண்டும்.இந்த முறை அதுக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என்றார்.

Related Posts