Home Archive by category

சம்பந்தனின் அழைப்பை புறக்கணித்த தலைவர்கள்; மூவர் மாத்திரமே பங்கேற்பு

சம்பந்தனின் அழைப்பிலே வட கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்கட்சி தலைவர்கள், அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒரு பொது நிலைப்பாட்டை அறிவிக்க இன்று மாலை கூட இருந்த போதிலும் மூவரை தவிர வேறு எவரும் கலந்துகொள்ளவில்லையென தெரியவருகிறது.  

தமிழரசு, கட்சித் தலைவர் திரு.மாவை சேனாதிராஜாவும், நானும்,சம்பந்தனும் மட்டும் தான் இப்பொழுது இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அவர், மேலும் தெரிவிக்கையில்,

மற்றவர்கள், சிலர் கால அவகாசம் போதாது என்று அறிவித்து இருந்தார்கள்.ஆகையால், எல்லோருக்கும் பொருத்தமான திகதியை தெரியப்படுத்தி அடுத்த அடுத்த வாரமே மீண்டும்  கூடலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி காலம் காலமாக எடுத்திருக்கும் நிலைப்பாடு சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வு அவசியம் என்பது.

சமஷ்டி கட்டமைப்பினாலான ஒரு தீர்வு வடகிழக்கு வழங்க வேண்டும். என்ற பொது நிலைப்பாட்டுடன் இணங்குகின்றவர்கள் எங்களுடன்  சேர்ந்து தங்களது குரல் பதிவையையும் சேர்த்து கொடுப்பது இந்த தருணத்தில் சிறந்தது என்று அவர் கூறினார்.

அடுத்த, கூட்டம் பற்றி தழிழ் அரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து அனைவருக்கும் பொருத்தமான திகதியிலேயே பொருத்தமான இடத்திலே  சந்திப்பை ஒழுங்குப்படுத்துமாறு நாங்கள் தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts