Home Archive by category

ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள அச்சம்; முக்கிய பொருளை வாங்க குவியும் மக்கள்

எதிர்வரும் குளிர்காலத்தில் சாத்தியமான எரிசக்தி நெருக்கடிக்கு ஜேர்மானியர்கள் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

இதனால் மின்சார ஹீட்டர்களின் விற்பனை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஜேர்மனியில் சுமார் 600,000 ஹீட்டர்கள் விற்கப்பட்டன என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான GFK தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 35% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மின்சார ஹீட்டர்களின் விற்பனையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கையில் இருக்கும் ஹீட்டர்கள் தீர்ந்துவிட்டன என்று பேர்லினில் உள்ள ஈசன் டோரிங் எலக்ட்ரிக்கல் கடையின் உரிமையாளர் ஃபிராங்க் டோரிங் கூறினார்.

வியோகித்தர் புதிய ஹீட்டர்களை எப்போது கொண்டு வருவார்கள் என்பது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறினார்.

ஜேர்மனி ரஷ்ய எரிசக்தி இறக்குமதிகளை பெரிதும் நம்பியுள்ளது, மேலும் காஸ்ப்ரோமின் எரிவாயு விநியோகத்தை மீண்டும் மீண்டும் குறைத்துள்ளதால், ரஷ்யா ஐரோப்பாவின் மீது அரசியல் செல்வாக்கைப் பெறுவதற்கு விநியோகங்களை நிறுத்தக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

Related Posts