Home Archive by category

மீண்டும் சிக்கலில் சிக்கிய அமெரிக்க மருத்துவர்

தன்­னிடம் சிகிச்­சைக்கு வரும் பெண்­களை   துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் பெண்­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்கு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்த அமெ­ரிக்க பல் மருத்­துவர் ஒருவர் மீண்டும் குற்­றத்தில் ஈடு­பட்­டதால் கைதா­கி­யுள்ளார்.

சார்ள்ஸ் ஸ்டாமி­டோலெஸ் (Dr. Charles Stamitoles)  எனும் இப்­பல்­ம­ருத்­துவர் புளோ­ரிடா மாநி­லத்தில் சிகிச்சை நிலை­ய­மொன்றை நடத்தி வந்துள்ளார்.

கடந்த வரு­டத்­டதில் மாத்­திரம் 22 தட­வைகள் அவர் மீது ஒழுங்­கீன குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன நி­லையில் கடந்த வாரம் அவர் மீண்டும் கைதா­கி­யுள்ளார்.

64 வய­தான இம்­ம­ருத்­துவர்  (Dr. Charles Stamitoles) மீது அடிக்­கடி  துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்டு வந்­ததால், அவர் ஆண்­க­ளுக்கு மாத்­தி­ரமே சிகிச்சை அளிக்­கலாம் என கடந்த ஜூன் மாதம் புளோ­ரிடா மருத்­துவ அதி­கா­ரிகள் சபை உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

எனினும் தொடர்ந்தும் பெண்­க­ளுக்கு சிகிச்சை அளித்த அவர் 2 மாதங்­களில் 34 தட­வைகள்  துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்­டு­களில் சிக்­கி­யுள்ளார். இவர் புளோ­ரிடா மாநி­லத்­திலும் ஜோர்­ஜியா மாநி­லத்­திலும் 1984 ஆம் ஆண்டு முதல் பணி­யாற்றி வந்­தவர்.

ஜோர்­ஜியா மாநி­லத்தில் 1984 முதல் 1987 ஆம் ஆண்டு வரை­யான காலத்தில் நோயா­ளி­க­ளுக்கு உரிய சிகிச்சை அளிக்கத் தவ­றி­யமை உட்­பட பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொண்­டுள்ளார்.

1989 ஆம் ஆண்டில் குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்ட அவ­ருக்கு 30 நாட்கள் இடை­நி­றுத்தம், 2 வருட நன்­ன­டத்தை கண்­கா­ணிப்பு, 2,000 டொலர் அப­ராதம் ஆகி­யன விதிக்­கப்­பட்­டுள்ளன.

1995 ஆம் ஆண்டு காப்­பு­றுதி குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் சார்ள்ஸ் ஸ்டாமி­டோ­லெஸின் (Dr. Charles Stamitoles)  பல்­ம­ருத்­துவ அனு­ம­திப்­பத்­திரம் ஜோர்­ஜியா மாநில அதி­கா­ரி­களால் ரத்­துச்­செய்­யப்­பட்­டி­ருந்து.

புளோ­ரிடா மாநி­லத்­திலும் பல்­வேறு தட­வைகள்   குற்­றச்­சாட்­டுக்­குள்­ளான மருத்­துவர் ஸ்டாமி­டோலெஸ் (Dr. Charles Stamitoles) , அண்மையில் கைதாகி 25,000 டொலர் பிணையில் விடுவிக்கப் பட்டிருந்தார்.

இந்­நி­லையில், சிகிச்­சைக்கு வந்த மற்றொரு பெண்ணை   துஷ்­பிர யோகப்­ப­டுத்த முயன்ற குற்­றச்­சாட்டில் அவர் (Dr. Charles Stamitoles) மீண்டும் கைதா­கி­யுள்ளார். 

Related Posts