Home Archive by category

யாழ் பண்ணைப் பாலத்தடியில் மீட்கப்பட்ட தாயும் 3 வயதுக் குழந்தையும்

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரும் அவரது 3 வயது மகளும் கடந்த 08.11.2022 அன்று காணாமல் போன நிலையில், அவர்களை பொதுச்சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்றையதினம் மீட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை - கரம்பொன் பகுதியைச் சேர்ந்த குழந்தையை நபரொருவர் துன்புறுத்தும் காணொலியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது எனினும், அது தொடர்பில் தீவிர விசாரணை களை முன்னெடுப்பதில் அதிகாரிகளிடத்தில் அசமந்தப்போக்கே நிலவுவதாகத் சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

 குறித்த 4 வயதுக் குழந்தை அவரது தாயார் நிறஞ்சினியுடன் (வயது-24) வசித்து வந்துள்ளது. வாய்பேச இயலா தவரான குறித்த இளம்தாய் 3 வருடங்களுக்கு மேல் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அண்மை யில் அவரும் குழந்தையும் குறித்த கணவனால் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தாயாரின் (நிறஞ்சனியின்) ஒளிப்படம் பொறிக்கப்பட்டு கண்ணீர் அஞ்சலி ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்தே, அந்த இளம் தாயாருக்கு (நிறஞ்சனிக்கு) என்ன நடந்தது என்பதை அறியவும், குழந்தைக்கு இடம்பெறும் சித்திரவதைகளைத் தடுக்கும் முகமாகவும் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் சிறுமியின் அம்மம்மா நேற்று முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில், தொடர்புடைய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்காமை தொடர்பில் பலரும் தமது அதிருப்திகளை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் சம்பவம்  தொடர்பில்  கவனம் எடுத்த ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய மருத்துவர் பரா.நந்தகுமாரின் தலைமையிலான குழுவினர்கள் இன்று காலை குழந்தை மீட்டனர்.

இன்று காலை 7.45 மணியளவில், மோசமாக தாக்கப்பட்ட ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த குறித்த குழந்தையும் தாயும், திருகோணமலையிலிருந்து தப்பி வந்து, யாழ். பண்ணை பாலத்தடியில் செய்வதறியாது நின்ற போது அவர்கள் குடும்ப நல உத்தியோகத்தர் திருமதி டினுசாவால் மீட்கப்பட்டுள்ளனர்.

தாயும் குழந்தையும்  வட மாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்திடம் தற்போது ஒப்படைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர்கள் அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts