Home Archive by category

இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் தலைவர், தூதுவர் ஃபெடரிகோ வில்லேகாஸ் நியூயோர்க்கில் நடைபெற்ற 77வது பொதுச் சபை அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்தார்.

சமீப ஆண்டுகளில், மனித உரிமைகள் பேரவை அதன் அதிகரித்து வரும் பணியின் அளவு மற்றும் அதை ஆதரிக்கும் துறைகள் மற்றும் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட வளங்களுக்கு இடையே, அதிகரித்து வரும் இடைவெளியின் விளைவாக நிறுவன சவால்களை எதிர்கொள்கிறது என்று வில்லேகாஸ் இதன்போது தெரிவித்தார்.

அதன் ஐம்பத்தொன்றாவது அமர்வில், “மனித உரிமைகள் பேரவைக்கு பொருத்தமான ஆதரவு” என்ற தலைப்பில் 51/101 தீர்மானத்தை சபை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

மேலும் இலங்கை மீதான பிரேரணையை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2022 செப்டெம்பர் 12 முதல் ஒக்டோபர் 7 வரை நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் ஐம்பத்தொன்றாவது அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானமும் முன்வைக்கப்பட்டது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற குறித்த தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.

அத்துடன், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts