Home Archive by category

எந்த தாக்குதலையும் சமாளிக்க தயார்; தைவான் அறிவிப்பு

சீனாவின் ராணுவ ஒத்திகைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும், எந்த ஒரு தாக்குதலையும் சமாளிக்க தயாராக உள்ளதாகவும் தைவான் தெரிவித்துள்ளது. தைவான் தனி நாடாக செயல்படுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் உலக நாடுகளின் உதவியை தைவான் கோரியுள்ளது.

சீனாவின் அண்டை நாடான தைவான் தனி நாடாக மற்ற நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், சீனா தைவானை தன்னாட்சி பெற்ற சீனாவின் பிராந்தியமாகவே கருதி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) சமீபத்தில் தைவானுக்கு பயணம் சென்றது சீனாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் தைவானை சுற்றி ராணுவபலத்தை அதிகரித்து வரும் சீனா போர் ஒத்திகைகளிலும் ஈடுபட்டு வருகிறது. அடிக்கடி சீனாவின் போர் விமானங்கள் தைவானிற்குள் எல்லை தாண்டி பறப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேசமயம் சமீபத்தில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடர்ந்தது போல தைவான் மீது சீனா எப்போது வேண்டுமேனாலும் போர் தொடரும் என்ற பதற்றம் இருந்து வருகிறது.

மேலும் இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவை தைவான் கோரியுள்ள நிலையில், சீனாவின் இந்த போர் ஒத்திகைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts