Home Archive by category

9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய ஆளுநர்களுக்கு பதிலாக ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1987 இந்திய - இலங்கை உடன்படிக்கையின் படி, ஆளுநர் பதவியானது மாகாணசபைகள் மீது நிறைவேற்று அதிகாரங்களை செலுத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பதவியாகும்.

இதன்படி மாகாண சபையினால் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டமும் சம்பந்தப்பட்ட ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னரே நடைமுறைக்கு வரும்.

தற்போது மாகாணசபைகள் இயங்காத நிலையில், ஆளுநர்களே முழு அதிகாரத்தையும் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அரசியல் அனுபவமுள்ளவர்களை ஆளுநர்களாக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என அவரின் நெருங்கிய தரப்புக்கள் கூறுகின்றன.

Related Posts