Home Archive by category

பிரித்தானியாவில் அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல்

பிரித்தானியாவில் தற்போது மிகப்பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் பண்ணைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் பறவைகள் வரையில் கண்காணிக்கப்படுகிறது.

பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அனைத்து கோழி பண்ணைகள் மற்றும் வளர்ப்பு பறவைகளையும் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கும் நடவடிக்கைகளும் அமுலுக்கு வந்துள்ளன.மேலும், காட்டு பறவைகளுடன் வளர்ப்பு பறவைகளும் ஒன்றாக கூடாமல் இருக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 200க்கும் அதிகமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே துரித நடவடிக்கைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எந்த வகையான பறவை அல்லது எண்ணிக்கையாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் பறவைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.மேலும், பறவைகளை பாதுகாப்பாக வைத்திருக்க தவறினால், கொல்லப்படும் சூழல் உருவாகலாம் எனவும் அரசாங்கம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பறவைக் காய்ச்சலால் பொது சுகாதாரத்திற்கான ஆபத்து மிகக் குறைவு என்று பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்து அறிவுறுத்துகிறது. மட்டுமின்றி, பறவைக் காய்ச்சலால் பிரித்தானிய நுகர்வோருக்கு பெரிதான அச்சுறுத்தல் ஏதுமில்லை எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Posts