Home Archive by category

இலங்கையில் மீண்டும் முகக்கவசம்..! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதால் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான நிபுணர் ஜூட் ஜயமஹா பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் பெறப்பட்ட கணிசமான எண்ணிக்கையிலான சளி மாதிரிகள் இன்புளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழை, கடும் குளிரும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்துடன் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பது இன்புளுவன்சா பரவுவதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வைரஸ் கர்ப்பிணித் தாய்மார்களைத் தாக்கினால், தாய்க்கும் குழந்தைக்கும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், அதிக பாதுகாப்பு சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வைரஸ் முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளை அதிகம் தாக்குவதால் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், முகக் கவசம் அணிதல், பயனங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நோயைத் தடுக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Related Posts