Home Archive by category

வடக்கில் கல்வியில் இடம்பெறும் ஊழல்கள் - போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்!

வடமாகாணத்தில் கல்வியில் இடம்பெறும் ஊழல்கள் சம்மந்தமாக இலங்கை ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்சிடம் முறைப்பாடுகள் செய்தும் விசாரணைகள் நடத்தாமல் இழுத்தடிப்பு தான் நடந்துகொண்டிருக்கிறது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாங்கள் 11 பாடசாலைகள் சம்மந்தமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைத்திருந்தோம். எனினும் இது தொடர்பில் எந்த நடவடிக்கைளும் எடுக்கவில்லை. 

வடமாகாண கல்வி பணிப்பாளர் இந்த செயற்பாடுகளுக்கு உகந்தையாக இருக்கிறாரே தவிர பிழைகளை திருத்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. வடமாண ஆளுநரும் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அரசியலுக்காகவே சில நடவடிக்கைள் நடக்கின்றன.

அரசியலை பாதுகாப்பதற்கு, அரசியலுக்கு எதிராக நடக்கின்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்கு குற்றவாளிகளை பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பில் கல்வி அமைச்சு, ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்ஷத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி சம்மந்தமாக இடம்பெறும் மோசடிகளுக்கு எதிராக ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடத்த எதிர்பார்க்கின்றோம்.

அரசாங்க உத்தியோகத்தர்களின் ஒய்வு வயதெல்லையை ரணில் அரசாங்கம் 65 இலிருந்து 60 ஆக கொண்டுவந்துள்ளது. சிலரை அரசியலின் ஒத்துழைப்புடன் ஒய்வுபெற்ற பின்னர் சேவைக்கு எடுப்பதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

தற்போது உறுதியான அரசியல் இல்லாத சூழ்நிலையில் ஊழல்களை பாதுகாப்பதும், பின் கதவால் செய்கிற செயற்பாடுகள் தான் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறோம். இலங்கை ஆசிரியர் சங்கம் அல்ல, ஏனைய கல்வி நிர்வாக தொழிற்சங்கங்கள் இணைந்து சேவை ஊழலுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லிக்கொள்கிறோம்.

ரணில், ராஜபக்ஷ அரசுக்கு தற்போது கல்வி சீர் திட்டங்களையோ, சுகாதார துறையையோ முன்னுக்கு கொண்டு போக இயலாது. மக்களுக்கு சாப்பாடு இல்லை, 3 மடங்காக செலவழிக்கிறார்கள். 

எனவே மக்கள் வாழ இயலாத சூழல் இருக்கிறது. இவற்றுக்கு ரணில் ராஜபக்ஷ அரசிடம் பதில் இல்லை. கல்வியிலும், வைத்தியசாலைக்கு பணம் செலவழிக்க முடியாத நிலையில் தான் இந்த அரசாங்கம் இருக்கிறது.

மாணவர்கள் போசாக்கு இல்லாமல் மந்த போசணை நிலைமையில் இருக்கிறார்கள். இதற்கு ஒரு நடவடிக்கையும் இல்லை. கல்விக்கு இருக்கிற செலவினை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இலங்கையில் 30 ஆயிரத்துக்கு மேலாக ஆசிரியர் குறைபாடு இருக்கிறது. பாடசாலைகளை மற்றும் மாணவர்களை ஒன்றாக இணைத்து ஆசிரியர்களை குறைப்பதற்காகவே இந்த செயற்பாடுகளே நடக்கின்றன. 

ரணில் அரசாங்கம் வெளிநாடுகளிடம் உதவிகளை பெற்று நாட்டினை கட்டியெழுப்புவார் என்று வதந்திகளை பரப்பினார்கள்.

ஆனால் இதன் நிலைமை மக்களுக்கு தெரியவந்துள்ளது. நாடு 36  பில்லியன் கடனில் இருக்கிறது. IMF இனால் கிடைக்கும் பணம் இந்த டிசம்பரில் கிடைக்காது, இந்நிலைமையை மக்களுக்கு ஒரு சலுகைகளும் வழங்க முடியாது.

இந்த ஆரசாங்கத்தினால் ஒன்றுமே செய்ய இயலாது, அதனால் தான் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை வைத்து அடக்கு முறைகளை கொண்டு வந்திருக்கிறார்கள். வருகின்ற போராட்டங்கள் இரத்தம் கூட வரலாம் என மத்திய வங்கி கூறியுள்ளது.

ஏனெனில் இது அடிமக்கள் மட்டத்திலிருந்து வருகின்ற போராட்டம். இதனால் அரசு ஒரு தீர்வும் கொடுக்க இயலாது. தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டம் நடாத்தி இந்த அரசாங்கத்தினை வெளியேற்றுவதை தவிர ஒன்றும் செய்ய இயலாது.- என்றார்.

Related Posts